போலியான புகைப்படங்கள் பகிரப்படுவதை தடுக்க உண்மை தன்மையை அறியும் (Fact check) லேபிளை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுளை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். சமூக வலைதளங்களில் அதிக அளவில் போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. போலியான தகவல்களால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. அதனால் இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் போலி புகைப்படங்கள் பகிரப்படுவதை தடுக்கும் வகையில் Fact check லேபிளை இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது. கூகுள் தேடலில் தோன்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் அடிப்படை வலை பக்கங்களுடன் இந்த புதிய லேபிள்கள் இணைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2017ம் ஆண்டு சூறாவளிக்கு பிறகு ஹூஸ்டன் தெருக்களில் சுறாக்கள் நீந்திக் கொண்டிருப்பதை போன்ற புகைப்படங்கள் வைரலாக பரவியது. இந்த புகைப்படங்களை வைத்து உண்மை சரிபார்ப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என கூகுள் விளக்கியுள்ளது. கூகுள் இமேஜில் 'sharks were swimming in the streets of Houston' என தேடும் போது புகைப்படங்கள் மேலே fact check என்ற ஒரு லேபிள் வருகிறது. இதனை வைத்து அதன் உண்மைத்தன்மையை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த லேபிள்கள் மூலம் குறிப்பிட்ட படங்களின் உண்மை சரிபார்ப்பு கட்டுரைகளை தெரிந்து கொள்ளலாம். இது தேடல் தரவரிசைகளை பாதிக்காது என்றும் கூகுள் கூறியுள்ளது. மக்களுக்கு உண்மையான தகவல்களை தரும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
إرسال تعليق